

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், எல்லையோர மாவட்டங்களான கோவை, கிருஷ்ணகிரி(ஓசூர்), தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் யானைகள் அதிக அளவில் உள்ளன. அதுவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலேயே அவற்றின் வாழ்விடம் அமைந்துள்ளது.
கோவையில் மேட்டுப்பாளையம் பகுதியில் அருகே மின்வேலி ஒன்றில் யானை ஒன்று சிக்கியது.அதனால் மின்சாரம் அதன் உடலில் பாய்ந்து அந்த ஆண் யானை உயிரிழந்தது. இந்த சம்பவம் தற்பொழுது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஜக்கனாரி பகுதியில் உள்ள வனப்பகுதி அருகே திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று இருக்கிறது. வனப்பகுதியில் உள்ள அந்தத் தோட்டத்தின் அருகிலேயே வனத்துறைக்கு சொந்தமான அகழியும் உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் ஏறத்தாழ 15 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அத்தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவ்விடத்தில் ஓர் ஆணை யானை அமர்ந்த நிலையில் உயிரிழந்திருந்து இருப்பதைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இறந்த அந்த யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததா, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததா என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். வனத்துறையினரின் முன்னிலையில் மருத்துவக்குழுவினர் அந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.
மின்வேலியின் கம்பியில் சிக்கி யானையின் தும்பிக்கை மற்றும் தோல் பகுதிகள் தீயில் கருகியுள்ளது யானையின் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. அதனால் அந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.
பொதுவாக மின்வேலிக்கு பேட்டரி மூலம் தான் இணைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் திருமலைராஜ் நேரடியாக மின் இணைப்பு கொடுத்தது விசாரணையில் அறிய வந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் திருமலைராஜ் என்பவரை கைது செய்து அவரின் மீது வழக்கு ஒன்றினைப்பதிவு செய்து உள்ளனர்.இது குறித்து கோவை வனத்துறை காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் திருமலைராஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதனால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.
இதேபோல கடந்த வாரம் தொண்டாமுத்தூர் அருகே ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இம்மாதிரியானஒரு சம்பவம் ஒன்று தருமபுரி மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. காட்டை சுற்றிப் போடப்படும் பயிர்கள் அனைத்தும், யானைகள கவர்வதாக அமைகின்றன. எனவே, அவை உணவுக்காக பயிர்களை நோக்கி படையெடுக்கின்றன.
தற்போது இந்தியாவில் 25,000லிருந்து 29,000 யானைகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதில் வெறும் 1200 ஆண் யானைகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஒரு ஆண் யானைக்கு 20ல் இருந்து 30 பெண் யானைகள் மட்டுமே இருக்கின்றன. ஆசிய யானைகளைப் பொறுத்தவரையில் 50 சதவீதம் இந்தியாவில்தான் இருக்கிறது. மற்ற நாடுகளில் அழிவின் விழிப்பை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகப் பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
வனத்துறையில் அறிவுறுத்தலின்படி 23 வோல்ட் உற்பத்தித் திறன் கொண்ட சோலர் மின் உருவாக்குதல் அமைத்து அதன் மூலமே மின்வேலிகள் அமைத்திருக்க வேண்டும்.அவ்வாறான குறைந்த அளவு மின்சாரம் மின் வேலியில் பாய்ச்சப்படும் போது அவை வன விலங்குகளுக்கு அதிர்வை மட்டும் ஏற்படுத்தும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாது.இதை கவனத்தில் கொண்டு விவசாயிகள் இனியாவது செயல் பட வேண்டும்.அப்போதுதான் நாட்டின் தற்போது இருக்கும் எண்ணிக்கை மேலும் குறைந்து போகாமல் இருக்கும் என நாம் திடமாக நம்பலாம்.