கொடைக்கானலில் ‘சிட்டி வியூ’ பகுதியில் காட்டுத் தீ!

கொடைக்கானலில் ‘சிட்டி வியூ’ பகுதியில் காட்டுத் தீ!
Published on

கொடைக்கானலில் ‘சிட்டி வியூ’ பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக காட்டுத் தீ பற்றி எரிவதால் பலநூறு ஏக்கர் அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமாகின.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக வறண்ட நிலை காணப்படுவதால் அடிக்கடி காட்டுத் தீ பரவி வருகிறது. அருகில் உள்ள வனப் பகுதிகளிலும் திடீரென தீ பரவியதால் வனத்தில் உள்ள அரிய வகை மரங்கள் தீயில் கருகின. சிட்டி வியூ பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ யால் புல்வெளிகள் கருகியுள்ளன. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீத்தடுப்பு எல்லைகளை அமைக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் போராடி வருகின்றனர். வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க தனி குழுக்களை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூறைக்காற்று , வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். அதற்காக நவீன தொழில்நுட்பமின்றி இலை உள்ளிட்டவைகளே பயன்படுத்தப்படுகிறது. நேற்று 2 வது நாளாக கொளுந்து விட்டு எரிந்த தீயால் கொடைக்கானல் நகரில் புகை மூட்டம் சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை காலம் துவங்கிய நிலையில் மலைப்பகுதி முழுவதும் தீ தடுப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபடுவது மற்றும் தீ தடுப்பு குறித்து கிராம மக்களுக்கு பயிற்சி வழங்குவார்கள்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீ தடுப்பு கோடுகள் அமைத்து தீ தடுப்பு மேலாண்மையிலிருந்து நூற்றுக்கும் அதிகமான ஆட்களை இரவு , பகல் என 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளித்து வருவாா்கள்.

இந்த ஆண்டு அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் எடுக்கவில்லை என சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், கொடைக்கானல் “சிட்டி வியூ” பள்ளத்தாக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் அரியவகை மூலிகை செடிகள் விலை உயா்ந்த மரங்கள் எரிந்து நாசமாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com