

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வகுத்துள்ளது.
நாமினேஷன் படிவம் (Nomination Form) சத்தியப்பிரமாணம் (Affidavit – Form 26), தேர்தல் வைப்பு தொகை (Security Deposit) , பரிந்துரையாளர்கள் (Proposers) , வாக்காளர் அட்டைVoter ID / EPIC நகல் , பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்(Passport size) , ஜாதி சான்று (Caste Certificate (SC/ST தொகுதிக்கு) உள்ளிட்டவை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாய ஆவணங்களாக உள்ளது.
இவற்றில் கட்சி சார்ந்த வேட்பாளர் (party Candidate) என்றால் – Form A & Form B முக்கியமானதாகிறது.
Form A கட்சியின் “அங்கீகரிக்கப்பட்ட கையெழுத்தாளர்” யார் என்பதை அறிவிக்கும்.
Form B அந்த தொகுதிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும். இவைகள் Returning Officer-க்கு காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக கட்சி வேட்பாளருக்கு “அதிகாரப்பூர்வ அங்கீகாரம்” அளிக்கும் கடிதமாக Form B மிகவும் முக்கியமானதாகிறது. தேர்தலில் மக்கள் வாக்குகளை அளிக்க உதவும் கட்சி சின்னம் பெற Form-B அவசியம் ஆகிறது. இல்லையெனில் அதிகாரப்பூர்வ கட்சி வேட்பாளர் என்ற அங்கீகாரமும் கட்சியின் ஒதுக்கப்பட்ட சின்னமும் (Reserved Symbol) கிடைக்காது.
மேலும் ஒரே தொகுதியில் பலர் மனுத்தாக்கல் செய்தாலும், ஒரே கட்சியிலிருந்து பலர் மனுத்தாக்கல் செய்தாலும் Form-B யாருக்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதோ அவர் மட்டுமே அதிகாரப்பூர்வ வேட்பாளராவார். குறிப்பாக Form-B விதிகள் படி சரியாக தாக்கல் செய்யப்படாவிட்டால், அந்த வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக (Independent) மட்டுமே களத்தில் இறங்க முடியும். மேலும் ஒரே கட்சியில் இருந்து இரண்டு பேர் மனு தாக்கல் செய்தால், Form B அளித்தவரே அதிகாரப்பூர்வ வேட்பாளர் என ஏற்கப்படுவார்.
Form -B சரியான விதிமுறைகளுடன் சரியான நபர் கையெழுத்துடன் சரியான நேரத்தில் வராவிட்டால் கட்சி சின்னம் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தல்களில் Form B தொடர்பாகப் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒரே கட்சியின் பெயரில் இருவர் மனுத்தாக்கல் செய்தபோது, இறுதியாக வழங்கப்பட்ட சரியான Form B-ஐ மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி (Returning Officer) ஏற்றுக் கொண்டார். கடைசி நேரத்தில் தொகுதி மாற்றம் அல்லது கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் மாற்றங்களால் Form B-யில் திருத்தங்கள் செய்ய வேண்டிய சூழலும் உருவாகலாம். எனவே, கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்புவோர் படிவம் B-ஐச் சரியாகச் சமர்ப்பிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
தவறான Form B காரணமாக சின்னம் வழங்கல் குறித்து மனுக்கள் அளிக்கப்பட்டது. இவையெல்லாம் எதிர்பாராத நிகழ்வுகளாக அப்போது சர்ச்சை கிளப்பியது. எனவே கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளராக களம் இறங்கி கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற விரும்புபவர்கள் Form-B யில் அதிக கவனம் வைப்பது நல்லது.