ஹனுமான் கோயில் வடிவ கேக் வெட்டி முன்னாள் முதல்வர் கமல்நாத்; சர்ச்சை!

முன்னாள் முதல்வர் கமல்நாத்
முன்னாள் முதல்வர் கமல்நாத்
Published on

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஹனுமான் கோயில் வடிவிலான கேக்கை வெட்டி தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 கமல்நாத் தனது சொந்த ஊரான சிந்த்வாராவுக்கு நேற்று மூன்று நாள் பயணமாகச் சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் அவரின் 76-வது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தனர்.

உண்மையில் கமல்நாத்துக்கு நாளைதான் பிறந்தநாள் (நவம்பர் 18) என்றாலும், அவர் தன் சொந்த ஊருக்கு வந்ததால் அங்கேயே பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்து கேக் வாங்கி வரப்பட்டது. கமல்நாத் ஆதரவாளர்கள் வாங்கி வந்த அந்த கேக் ஹனுமான் கோயில் வடிவத்தில் இருந்தது. அதனை கமல்நாத் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

 ஆனால் கோயில் வடிவத்தில் இருந்த கேக்கை  வெட்டி, இந்துக்களின் உணர்வுகளை கமல்நாத் புண்படுத்தி விட்டதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது;

கமல்நாத்தும், அவரின் போலி பக்தர்களும் இந்து மதத்திற்காக எதையும் செய்யவில்லை. கமல்நாத் இருக்கும் கட்சிதான் ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தது.

அது தேர்தலில் அவர்களை மோசமாக பாதித்தது. இப்போது ஹனுமான் படத்தை கேக்கில் போட்டு அதனை வெட்டி இருக்கின்றனர். யாராவது கடவுளின் படம் இருக்கும் கேக்கை வெட்டுவார்களா? "இது இந்து மதத்தையும், சனாதன பாரம்பரியத்தையும் அவமதிப்பதாகும்" என்று தெரிவித்துள்ளார்.

 கமல்நாத் தனது சொந்த ஊரில் உள்ள வீட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com