மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாரடைப்பால் காலமானார்!

Manohar Joshi
Manohar Joshi

மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மாரடைப்பால் காலமானார். 86 வயதுடைய இவர் இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மனோகர் ஜோஷி ஆரம்பக்காலத்தில் ஒரு ஆசிரியராகவே பணியாற்றினார். பின்னர் 1967ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். இதனையடுத்து 1968ம் ஆண்டு முன்பை மாநகராட்சி கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் 1972ம் ஆண்டு முதல் முறையாக சட்டமேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் இவர் 1976ம் ஆண்டு மும்பை மேயராகவும் பதவியேற்றார். சிவசேனா, பா.ஜ.க கூட்டணியின் போது 1995ம் ஆண்டு மனோகர் ஜோஷி மகாராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்றார்.

அதன்பின்னர்தான் 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா முதல்வராக இருந்தார். பின்னர் தனது இறுதி காலம் வரை கோஹினூர் என்ற பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். மனோகர் ஜோஷிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அதாவது 2002 முதல் 2004ம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராகவும் சபாநாயகராகவும் இருந்தார். அதேபோல் இவர் சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவர். ஆகையால்தான் பால் தாக்கரே மனோகர் ஜோசியின் பதவியை ராஜினா செய்யும்படி கூறிய உடனே அவர் பதவியிலிருந்து விலகினார். ஆரம்பக்காலத்தில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க, சிவசேனா உறவுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மனோகர் ஜோஷி.

இந்நிலையில் மனோகர் ஜோஷிக்கு நேற்று முன்தினம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. ஆகையால் அவர் உடனே மும்பை பாந்த்ராவில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையும் படியுங்கள்:
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி எஸ் நாரிமன் காலமானார்!
Manohar Joshi

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால் மனோகர் ஜோஷியின் மரணத்தைப் பற்றிய செய்தியை கேட்டவுடன் பாதியிலேயே பயணத்தை முடித்துவிட்டு மும்பை திரும்பியுள்ளார். சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தபோது தொடர்ந்து மனோகர் ஜோஷி உத்தவ் தாக்கரேவிற்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவசேனா கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் மறைந்த மனோகர் ஜோஷிக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இவரின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com