திகார் சிறை முன்னாள் அதிகாரி சஸ்பெண்ட்!

சந்தீப் கோயல்
சந்தீப் கோயல்
Published on

மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும், தில்லி திகார் சிறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரலுமான சந்தீப் கோயலை சஸ்பெண்ட் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அவர் கடமை தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சகம் அதற்கான காரணங்களை வெளியிடவில்லை.

1989 ஆம் ஆண்டு இந்திய போலீஸ் சேவை பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான கோயல், கடந்த மாதம் தில்லி திகார் சிறை அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தில்லி போலீஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார்.

பரபரப்பான ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதில் அண்மையில் சிறையில் பாதுகாப்பாக இருக்க சிறை தலைமை அதிகாரி கோயலுக்கு ரூ.12.5 கோடி லஞ்சம் கொடுத்ததாக தில்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்

பல்வேறு தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அங்கு தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தாம் எப்போதும் கொல்லப்படலாம் என்று அச்சம் தெரிவித்தார் அதன் பின்னரே அவர் மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டார்.

தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு கடந்த அக்டோபர் மாதம் சுகேஷ் சந்திரசேகர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் சத்யேந்தர் ஜெயின், 2019 ஆம் ஆண்டு சிறையில் நான் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய ரூ.10 கோடி கேட்டார். இது தவிர சிறை அதிகாரி கோயலுக்கு மாதம் ரூ.1.5 கோடி கொடுக்குமாறும் கூறினார். அந்த வகையில் கோயலுக்கு இதுவரை ரூ.12.50 கோடி தரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைவர் சத்யேந்தர் ஜெயினிடம் முதலில் ரூ.10 கோடியும், பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு ரூ.50 கோடியும் கொடுத்ததாக மேலும் குறிப்பிட்டுள்ளார். தனது வழக்குரைஞர் அசோக் சிங் மூலம் தனது புகார் கடிதத்தை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திகார் சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி தலைவர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து அது குறித்து விசாரிக்க தில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா ஒரு குழுவை அமைத்தார். அப்போது சந்தீப் கோயல், ஜெயினுடன் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டு அவருக்கு உதவியிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கோயல் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க குழு பரிந்துரைத்ததை அடுத்து அவர் திகார் சிறையிலிருந்து போலீஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக அவர் இப்பொது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com