முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் மறைவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் மறைவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ஆர்.ஜே.டி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தனது கடைசி மூச்சு வரை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை என்ற இலட்சியங்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்த மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனாதா தள கட்சித் தலைவருமான ஷரத் யாதவ் தனது 75வது வயதில் நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஷரத் யாதவ் உடல்நிலை குறைபாடு காரணமாக குரு கிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் தலைவரான ஷரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999 - 2004 மத்திய அமைச்சராக இருந்தார்.

பின்னர் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியிலிருந்து பிரிந்து லோக் தந்திரிக் ஜனதா தளம் எனும் தனிக் கட்சி தொடங்கினார். வயது முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் அரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சரான ஷரத் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com