

முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஜக்தீப் தன்கருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும் வீட்டில் 2 முறை மயக்கமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ஜக்தீப் தன்கருக்கு இன்று உடல்நலக்குறைவு மேலும் மோசமடைந்ததால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. தற்போது தன்கர் நலமுடன் உள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.