ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நான்கு முறை நில அதிர்வு!

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து  நான்கு முறை நில அதிர்வு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து இன்று அதிகாலை வரை நான்கு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் நில அதிர்வினை உணர்ந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மலைப்பகுதி மாவட்டங்களான தோடா மற்றும் கிஷ்த்வாரில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தது. இரண்டு பள்ளிக் குழந்தைகள் உள்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர். முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது .

ஜம்மு காஷ்மீரின் கண்டோ பாலேசா என்ற இடத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா பகுதிகளையும் அதிரவைத்தது. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.|

earth quake
earth quake

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதிகளில் மீண்டும் அடுத்தடுத்து நான்கு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இன்று காலை 8.29 மணியளவில் கிஷ்த்வாரில் 3.3 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது . அதே போன்று தோடாவில் 7.56 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இவை இரண்டும் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.

அதிகாலை 2.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் தோடா மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது . ரியாசி மாவட்டம் கிழக்கு கத்ராவில் இருநது 74 கி.மீட்டர் தொலைவில் 2.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து இன்று அதிர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இது போன்று சிறிய அதிர்வுகள் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட மாநிலங்கள் குலுங்கியது . ஹரியானா, பஞ்சாப், டெல்லி, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com