ஒரே இரவில் பிரான்ஸ் நாடாக மாறிய புதுச்சேரி!

ஒரே இரவில் பிரான்ஸ் நாடாக மாறிய புதுச்சேரி!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பிரான்ஸ் நாட்டின் தேசிய நாளையொட்டி ஒரே நாளில் ஒட்டுமொத்த புதுச்சேரியும் பிரான்ஸ் தேசம் போல மாறியது.

பிரான்ஸ்-ல் மன்னராட்சி நிறைவுபெற்று, மக்களாட்சி மலர்ந்த ஜூலை 14ஆம் தேதி, தேசிய நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று புதுச்சேரி  கடற்கரை சாலையில் இருந்து பிரெஞ்ச் தூதரகம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வண்ணமயமான ஊர்வலம் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் இந்திய நாட்டின் கொடிகளுடன் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இரவு பிரான்ஸ் தூதரகத்தில் வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. 20 நிமிடங்கள் நடைபெற்ற வாண வேடிக்கை நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் மற் பொதுமக்கள் கண்டுகளித்தனர். பிரெஞ்சு தூதரகம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் பிரான்ஸின் தேசிய கொடி போன்ற வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.

logo
Kalki Online
kalkionline.com