மெரினா கடற்கரையில் இலவச இணைய சேவை; அரசு ஆலோசனை!

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை
Published on

உலகின் 2-வது பெரிய கடற்கரையான சென்னை மெரினாவில் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் விரைவில் மெரினாவில் இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில்  சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் 24 மணி நேர இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் சென்னை வாசிகளின் பிரதான பொழுது போக்கு தளமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், இந்த கடற்கரைகளில் சுற்றுலா துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவச இணையதள சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக மெரினாவில் 5 இடங்களில் இலவச வைபை நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு முன்னதாக மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் சுலபமாகச் சென்று வரும் வகையில் சிறப்புப் பாதை அமைக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. இது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com