துபாயில்  இலவச ரொட்டி மிஷின்கள் : துபாய் பிரதமர் அறிவிப்பு !

தனியொருவருக்கு உணவில்லையெனில்....
Prime Minister Sheikh Mohammed bin Rashid Al Maktoum
Prime Minister Sheikh Mohammed bin Rashid Al Maktoum

இனி துபாயில் வாழும் மக்கள் யாரும் பசியாக இருக்கக்கூடாது என்ற நோக்கில் துபாயின் பிரதமர் ஷேக்முகம்மது  பின் ரஷீத் அல் மக்தோம் இந்த உயரிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதற்காக துபாய் நாட்டின் பல்வேறு இடங்களில் இலவச ரொட்டி வழங்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளது துபாய் அரசு.

துபாயில் பணிபுரியும் பலர் மூன்று வேளையும் சாப்பிட உணவு கிடைக்காமல் அவதியுறுவதாக வந்த தகவல்களால் இனி துபாயில் யாருமே பசியுடன் இருக்கக்கூடாது என்கிற சீரிய நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

chapathi img
chapathi img

இனி துபாயில் வேலைக்கு செல்வோருக்கு போதுமான சம்பளம் கிடைக்கிறதோ இல்லையோ மூன்றுவேளை உணவு கிடைக்கும் என நிம்மதியடைகின்றனர் துபாய் நாட்டிற்கு வேலை தேடி செல்வோர்.

இந்த உயர்ந்த திட்டத்திற்காக அந்நாட்டு பிரதமர் ஷேக்முகம்மது  பின் ரஷீத் அல் மக்தோம் அவர்களை பலரும் நன்றியுடன் வாழ்த்துகிறார்கள். ஏனைய அரபு தேசங்களிலும் இத்திட்டம் நடைமுறையில் வருமா என ஏக்கத்துடன் நோக்குகிறார்கள் அரபு தேசங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com