விவசாயிகளுக்கு வருமானம் தரும் வகையில் மரக்கன்றுகளை வழங்கும் திட்டம் தமிழ்நாடு வேளாண் துறையின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மரக்கன்றுகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ள கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் விவசாய தொழிலும் ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக சுற்றுப்புற சூழல் மாறி இருக்கிறது. இதனால் பல்வேறு வகையான பாதிப்புகளை மக்களும் இயற்கையும் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதை தடுக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பலகோடி மரக்கன்று நடும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர வைப்புத் தொகை மற்றும் வருமானம் தரக்கூடிய இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
இதற்காக விவசாயிகள் உழவன் செயலி வழியாக விண்ணப்பித்து இலவச மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பிப்பவர்களுக்கு தேக்கு, வேம்பு, மகோகனி, புங்கை, நாவல் போன்ற மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு வகையான மரக்கன்றுகளும் உள்ளது. இதில் விவசாயிகள் தேவைக்கேற்ப கேட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டினுடைய சுற்றுப்புற சூழல் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மரக்கன்றுகளை நட்டு விடுவதோடு மற்றும் நின்று விடாமல் தினசரி பராமரிப்பதற்கு ஆலோசனை வழங்கப்படும் வழங்கப்படுகிறது.