சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து!

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து!
Published on

த்தியப் பிரதேச மாநிலம், ஷாதூல் நகர் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயில்கள் மோதிய வேகத்தில் ஒரு  ரயில் என்ஜின் மற்றொரு ரயில் மீது ஏறி நின்றதோடு, ஒரு சரக்கு ரயிலின் எஞ்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பீகார் மாநிலம், முசாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பிரசாத் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு ரயில் ஓட்டுநர்கள் உட்பட, ஐந்து  பேர் காயம் அடைந்துள்ளதாகத்  தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில் விபத்துத் தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், விபத்து ஏற்பட்ட பகுதியில் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Gowthami S

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிலாஸ்பூரில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் கட்னி பகுதிக்கு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில், மத்திய பிரதேசத்தின் ஷாஹ்டேல் மாவட்டம் சிங்கூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதும் ரயில் தீ பிடித்து எரிந்தது. இதில் ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில்வே ஊழியர்கள் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர்‘ என்று தெரிவித்து இருக்கிறார். இந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து பல தடங்களின் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் விபத்து சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com