கேரளா முதல் மத்திய பிரதேசம் வரை பழங்குடிகள் மீது தொடரும் அவலம்!

கேரளா முதல் மத்திய பிரதேசம் வரை பழங்குடிகள் மீது தொடரும் அவலம்!
Published on

மனிதன் தனது சிந்தனையையும் செயலையும் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருப்பதன் விளைவாக நாகரிகம் பிறக்கிறது. 21ம் நூற்றாண்டு மனித நாகரீகத்தின் உச்சம் என்று பெருமை அடித்துக் கொண்டிருக்க கூடிய அதே நேரத்தில் மனித மாண்பின் மீது படிந்துள்ள அழுக்குகள் அதிகமதிகம் வெளிப்பட்டு வருகின்றன. 2018 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் அரிசி திருடியதாக பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மது என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது அன்று நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலியை ஏற்படுத்திய நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற இளைஞர் மது போதையில் சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரவேஷ் சுக்லா பிஜேபி எம்எல்ஏவின் ஆதரவாளர் என்று கூறப்பட்ட நிலையில் எம்எல்ஏ கேதர் சுக்லா அதை மறுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த கொடூரச் செயல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் "சித்தி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளிவந்துள்ளது. இதில் உள்ள குற்றவாளியை உடனடியாக கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக" பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் மனைவி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த கொடூரச் செயலில் பாதிக்கப்பட்டவர் என் கணவர். இந்த தவறான செயலில் ஈடுபட்ட நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என கூறியுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பிரவேஷ் சுக்லா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com