இனி அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் கிடைக்கும் ..!

இனி அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் கிடைக்கும் ..!

ஓவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் மத்திய அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தினை, அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இந்த வட்டி அதிகரிப்பால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரும் பலன் அடையலாம்.

அஞ்சலக திட்டங்களுக்கு ஏப்ரல் - ஜூன் 2023க்கான காலாண்டுக்கான வட்டி விகிதத்தினை, மத்திய அரசு இன்று 70 அடிப்படை புள்ளிகள் வரையில் அதிகரிக்கப் பட்டுள்ளது.மக்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் பணத்தை போடுகின்றனர். அரசு திட்டங்களின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு, முதலீட்டில் இருந்து வரிச் சலுகைகளும் கிடைக்கும். சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற அஞ்சலக திட்டங்களுக்கு வெவ்வேறு விகிதங்களில் ஆண்டு அடிப்படையில் வட்டியும் வழங்கப்படுகிறது. 

இந்த வட்டி அதிகரிப்பானது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருவாய் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் என பல்வேறு திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பினை செய்துள்ளது. இவற்றோடு டைம் டெபாசிட் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா (சுகன்யா சம்ரிதி யோஜனா - 8.0% ) திட்டத்திற்கும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மத்திய வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதனால் சமீபத்திய காலமாக வைப்பு நிதிகள் கவர்ச்சிகரமான திட்டங்களாக மாறி வருகின்றன. இந்த நிலையில் தான் மத்திய அரசு அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com