புதுவையில் ஜி20 மாநாடு! பிச்சைகாரர்களைத் துரத்தும் அதிகாரிகள்!

புதுவையில் ஜி20 மாநாடு! பிச்சைகாரர்களைத் துரத்தும் அதிகாரிகள்!
Published on

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்று நடத்தவிருக்கிறது. புதுச்சேரியில் இரண்டு நாட்கள் நடைபெறும், இம்மாநாடு இன்று கோலாகல மாகத் தொடங்கியது. ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல் 20 மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட  ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் 75 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

புதுச்சேரியின் பிரதான சாலைகளை புதுப்பித்தும், டிவைடர்களில் வர்ணம் பூசியும், பூச்செடிகள் நட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, சாலைகளில் சுற்றித் திரிந்த பிச்சைக்காரர்களை சமூக நலத்துறையினர், நேற்று காவல்துறை உதவியுடன், பிடித்து நகராட்சி காப்பகங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு வரும் 31ம் தேதிவரை உணவு வழங்கவும், மருத்துவ உதவிகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சிலர் காப்பகம் செல்ல மறுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையோரம் படுத்திருந்தவர்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் பிச்சை எடுப்பவர்கள் என அனைவரையும் நகராட்சி அதிகாரிகள் பிடித்து சென்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று மாநாட்டை முன்னிட்டு நகரில் அமைந்துள்ள குடிசைகளை மறைக்கும் வகையில் சில இடங்களில் குடிசை வீடுகளின் முன்பாக பிரமாண்ட பேனர்களை அமைத்து குடிசைகளை மறைத்துள்ளனர். இது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com