‘குண்டர்களின் கூட்டம் பஜ்ரங் தளம்’ திக்விஜய் சிங் விமர்சனம்!

‘குண்டர்களின் கூட்டம் பஜ்ரங் தளம்’ திக்விஜய் சிங் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சனாதனம் என்பதுதான் நமது தர்மம். அதேசமயம் இந்துத்துவாவை நாங்கள் தர்மமாகக் கருதுவது இல்லை. ‘கொள்கையை ஏற்காதவனை தடியால் அடி, அவர்களது வீட்டை இடித்துத் தள்ளு, பணத்தைக் கொள்ளையடி’ இதுதான் இந்துத்துவா தர்மம் ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி பஜ்ரங் தளம் அமைப்பை ஆஞ்சனேயரோடு ஒப்பிட்டுப் பேசியது வலியை ஏற்படுத்தியது. இந்த குண்டர் கூட்டம்தான் ஜபல்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தைத் தாக்கி நாசப்படுத்தியது. ஆஞ்சனேயரை பஜ்ரங் தளம் என்று முழங்குவது ஆஞ்சனேயரை அவமதிக்கும் செயல் ஆகும். இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கர்நாடகாவில், ‘பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும்’ என்று காங்கிரஸ் கட்சி அளித்துள்ள வாக்குறுதியைப் பொறுத்தவரை, ‘வெறுப்புணர்வை பரப்புவர்களுக்கு எதிராக அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும்,, அமைப்பாக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. நாங்கள் அதனை நிச்சயம் பின்பற்றுவோம்' என்று திக்விஜய் சிங் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com