பூண்டு - வெங்காயத்தை சுவைக்காத கிராம மக்கள்! வினோத வழக்கம்

பூண்டு - வெங்காயத்தை சுவைக்காத கிராம மக்கள்! வினோத வழக்கம்

சமையலில் சுவைக்காகவும் உடல் நலனுக்காகவும் சேர்க் கப்படுவதுதான் பூண்டு மற்றும் வெங்காயம். இவ்விரண்டையும் கடந்த 45 ஆண்டுகளாக உணவில் சேர்க்காமல் ஒதுக்கிவைத்துள்ள கிராமம் ஒன்று உள்ளது. பலர் இந்த மரபை உடைக்க முயன்றபோது, ​​ அவர்களின் வீடுகளில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தாக கூறுகிறார்கள். இந்த கிராமத்தில் பூண்டு, வெங்காயம் மட்டுமின்றி இறைச்சி, மது போன்ற பொருட்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் பயன்படுத்தாத வீடுகளை காண்பது மிக மிக அரிது. வெங்காயம் - பூண்டு இவ்விரண்டின் விலை அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி, அவை நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகின்றன. இவற்றை உணவில் சேர்ப்பதால் உணவின் சுவை அதிகரிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இவ்வளவு நன்மைகள் இருந்தும் இவற்றைத் தொடாமல் ஒரு கிராமமே உள்ளது என்றால் ஆச்சர்யமாகத்தானே உள்ளது.

அந்த கிராமம் பீகாரில் உள்ள ஜெகனாபாத் அருகே உள்ளது. சிரி பஞ்சாயத்தின் கீழ் வருகிறது திரிலோகி பிகா கிராமம். இந்த கிராமம், ஜெகனாபாத் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 30 முதல் 35 வீடுகள் உள்ளன. இங்குள்ள அனைத்து வீடுகளிலும் உணவில் வெங்காயம், பூண்டு சேர்ப்பது கிடையாது.

இக்கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் கூறுகையில்,

சுமார் 40 முதல் 45 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் மக்கள் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்.  இங்குள்ள மக்கள் நீண்ட காலமாக இந்த பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள். இக்கிராமத்தில் தாகுர்பாடி கோவில் உள்ளது. இது பல ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் காரணமாக, இக்கிராமத்து மக்கள் பூண்டு, வெங்காயத்தை தொடுவதில்லை.

பலர் இந்த மரபை உடைக்க முயன்றபோது, ​​பல விரும்பத்தகாத சம்பவங்கள் அவர்களின் வீடுகளில் நிகழ்ந்திருக்கிறது. இச்சம்பவங்களுக்குப் பிறகு, இங்குள்ள மக்கள் பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தாமல் சந்தையில் இருந்து கொண்டு வருவதையும் நிறுத்திவிட்டனர்.

இறைச்சி, மது போன்ற பொருட்களும் இங்கு இல்லை. தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு யாரும் மது அருந்துவதை பார்க்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com