என்னது பூமியில் நரகத்தின் வாசலா?

என்னது பூமியில் நரகத்தின் வாசலா?

பொதுவாக மனிதர்கள் இறந்த பிறகு அவர்கள் செய்யும் பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வார்கள் என கூறப்படுவது உண்டு. ஆனால், பூமியிலேயே நரகத்தின் வாசல் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நரகத்தின் வாசல் ரஷ்யாவில் உள்ளது. 1980களில் ரஷ்யாவில் உள்ள சைபிரியா பகுதியில் இந்த ராட்சத பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது. ராட்சச பள்ளம் என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் அந்தப் பள்ளம் நாளுக்கு நாள் நிலத்தை விழுங்கிக்கொண்டு வருகிறது என்றால் ஆச்சரியம் தானே?. 

அத்தனை மர்மத்தையும் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் இந்த பள்ளத்திற்குள் இன்னொரு உலகத்திற்கான பாதை இருப்பதாகவும், பூகம்பம் ஏற்படப்போவதற்கான அறிகுறி தான் இந்த பள்ளம் எனவும், கட்டுக்கதைகள் பல சமூக வலைதளங்களில் உலாவுகின்றன. 

சிலர் விண்கல் தரையில் மோதியதால் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். வேறு சிலரோ இன்னும் ஒரு படி மேலே சென்று, வேற்று கிரக வாசிகள் வந்து தரையிறங்கியதால் இப்படி ஆகிவிட்டது என்கின்றனர். ஆனால் இந்தப் பள்ளம் எப்படி உருவானது, எதனால் உருவானது என்ற கேள்விக்கு தற்போதுவரை விடை கிடைக்காமல் விஞ்ஞானிகளே குழப்பத்தில் இருப்பது தான் நம்மை மேலும் பீதியடையச் செய்கிறது. 

தலைப்பிரட்டை வடிவில் இருக்கும் இந்த ராட்சத பள்ளம், 1980லேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. 281 அடி ஆழம் கொண்ட இந்த பள்ளம், ஆண்டுக்கு 30அடி வரை வளர்ந்து கொண்டே செல்வது மேலும் பயத்தை ஏற்படுத்துகிறது. இப்படி பல மர்மங்களை தன்னுள் வைத்திருக்கும் இந்த பள்ளம் ரஷ்யாவின் சைபிரியாவில் உள்ளது. 

உரைப்பணி மிகுந்த இந்த இடம் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகவே பார்க்கப்பட்டு வந்ததால், ஆரம்பத்தில் இந்த பள்ளம் மீது கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால் தற்போது இந்த பள்ளத்தில் ஐஸ் ஏஜ் காலத்து மண் அடுக்குகள் காணப்படுவதாக தகவல் வெளியாகி இருப்பது, பள்ளம் குறித்த ஆச்சரியத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

பல ஆண்டுகளாக உரைந்து காணப்பட்ட இந்த இடத்தின் மீது சூரிய ஒளி படப் பட, உரை பணிகள் உருகத் தொடங்கியதால், இந்த பள்ளம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட இடத்திற்கு கீழே பூமியின் பாறைகள் குறைவாக இருப்பதாலும், திடீரென நீரோட்டம் ஏற்படுவதாலும் கூட இப்படி பள்ளம் தோன்ற வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் புவியியல் ஆய்வாளர்கள். இப்படிப்பட்ட இந்த ராட்சத பள்ளம் இயற்கையின் மற்றொரு அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com