கெளதம் அதானி சரிவு! உலக பணக்காரர் பட்டியலில் நான்காவது இடம்!

கெளதம் அதானி
கெளதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி உலகின் 4வது பில்லியனர் என்ற இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதானியின் மூன்றாவது இடத்தினை அமேசானின் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) பிடித்துள்ளார். அதானி தன் நிகர சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்தில் இருந்தவர், தற்போது நான்காவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அதானிக்கு, நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 112 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதால், மொத்த சொத்து மதிப்பு 9 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதனால், சிறிய வித்தியாசத்தில், அதானியை முந்திய அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 3-வது இடத்திற்கு முன்னேறினார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் தினசரி உலகின் பில்லியனர்களின் தரவரிசையினை பட்டியலிட்டு வருகின்றது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் அதானியின் நெட்வொர்த் 872 மில்லியன் குறைந்துள்ளது

கொரோனா காலத்தில் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு குறைந்த நிலையில், அதானியின் சொத்து மதிப்பு 13 மடங்கு உயர்ந்தது.கடந்த செப்டம்பர் மாதம் 12.6 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய அதானியின் சொத்து மதிப்பு, கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) 15.3 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், 12.6 லட்சம் கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள எலான் மஸ்க் (Elon Musk)இரண்டாது இடத்திலும் நீடிக்கின்றனர். 9 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள Bill Gates 5வது இடத்தில் தொடர்வதாகவும் புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com