இன்புளூயன்சாவை எதிர்கொள்ள ஜெம்கோவாக் ஓஎம் தடுப்பூசி - ஓரிரு வாரங்களில் அறிமுகமாகிறது!

இன்புளூயன்சாவை எதிர்கொள்ள ஜெம்கோவாக் ஓஎம் தடுப்பூசி - ஓரிரு வாரங்களில் அறிமுகமாகிறது!
Published on

உலக சுகாதார அமைப்பு, இன்புளூயன்ஸா தொற்றில் பாதிப்பு அச்சம் ஒவ்வொரு ஆண்டும் இருப்பதாக தெரிவித்துள்ளது. இனி தடுப்பூசி என்பது தடுக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வரவிருக்கும் தொற்றை எதிர்கொள்வதற்கு தடுப்பூசி மட்டுமே இன்று நமக்கு துணையாக இருக்கிறது.

புனேவைச் சேர்ந்த ஜென்னோவா பயோ பர்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசியை தயாரித்திருக்கிறது. ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த சார்ஸ் கோவி தொற்றுக்கான தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஜெம்கோவாக் ஓஎம் என்னும் பெயரில் இன்னும் பத்து நாட்களில் அறிமுகமாக உள்ள புதிய தடுப்பூசிக்கு முதல் கட்டமாக 70 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்க அனுமதி கிடைத்துள்ளது.

2022ல் ஜெம்கோவாக் ஓஎம் தடுப்பூசிக்கான பணிகள் ஆரம்பித்தன. தற்போது 10 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கின்றன. ஒரிரு வாரங்களில் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. தடுப்பூசியின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. தடுப்பூசியை பராமரிக்க குறைவாக வெப்பநிலையும் இருக்கத் தேவையில்லை. சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விநியோகிக்க முடியும் என்கிறார்கள்.

ஆர்டர் கிடைத்தால் நூறு நாளில் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசியை மக்கள் மத்தியில் பரவலாக்க குறைவான விலை கொண்ட தடுப்பூசிகளை சந்தையில் அறிமுகப்படுததவேண்டியிருக்கிறது.

மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகள் மெசஞ்சர் ஆர்என்ஏ அல்லது எம்ஆர்என்ஏ அடிப்படையில் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இது கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் SARS-CoV-2 இன் ஸ்பைக் புரதத்தை மீண்டும் உருவாக்குகிறது. இது கொரோனா வைரஸின் மேற்பரப்பில் கூர்முனைகளாகத் தோன்றி பின்னர் செல்களை ஊடுருவுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெம்கோவாக்-19 என்கிற பெயரில் விற்கப்படும் இந்தியாவின் முதல் mRNA தடுப்பூசிக்கு அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரத்தை மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் வழங்கியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணையாகப் போட்டுக்கொள்ள நிலை இருந்தது. இனி இரண்டு தவணைகள் தேவைப்படாது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com