வேலையில் பாலின இடைவெளி எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது: ஐ.நா!

வேலையில் பாலின இடைவெளி எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது: ஐ.நா!

வேலைக்கான தேடுதல் வேட்டையில் "இந்த பாலின இடைவெளி இரண்டு தசாப்தங்களாக கிட்டத்தட்ட மாறாமல் உள்ளது," என ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.

உலகளவில் பெண்கள் முன்பு எப்போதையும் விட அவர்களது கடினமான தருணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் பெண்களைப் பொருத்தவரை வேலை நிலைமைகள் மற்றும் ஊதியத்தில் பாலின இடைவெளி என்பது இரண்டு தசாப்தங்களாக அரிதினும் அரிதாக மாற்றமே இல்லாமல் இன்றும் அதே போலத்தான் இருக்கிறது - என்று ஐக்கிய நாடுகள் சபை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதங்களை விட சிறந்த வேலையைச் செய்யும் புதிய இண்டிகேட்டர் ஒன்றை உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறது, இதன் மூலமாக வேலை தேடுவதில் ஆர்வமுள்ள அதே நேரத்தில் வேலையில்லாமல் இருக்கக் கூடிய அனைவரைப் பற்றியும் சாதகமான,சாதகமற்ற அனைத்துத் தகவல்களையும் அறுதியிட்டுத் தெரிந்து கொள்ள முடிகிறது. என ILO தெரிவிக்கிறது.

"இது பொதுவாக உத்யோகப்பூர்வ வேலையின்மை விகிதத்தை விட வேலை உலகில் பெண்களின் நிலைமையைப் பற்றி மிகவும் இருண்டதொரு சித்திரத்தைத் தருவதாகவே உள்ளது," என சர்வதேச மகளிர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ILO ஒரு அறிக்கையில் கூறியது.

"புதிதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், வேலைக்கான தேடுதல் வேட்டையில் ஆண்களை விட பெண்களுக்கே இப்போதும் கடினமான சூழல் நிலவுகிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

புதிய ILO தரவுகளின்படி, 10.5 சதவீத ஆண்களுடன் ஒப்பிடும்போது, உலகளவில் வேலை செய்யும் வயதுடைய பெண்களில் 15 சதவீதம் பேர் வேலை செய்ய விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கு வேலை இல்லை.

"இந்த பாலின இடைவெளி இரண்டு தசாப்தங்களாக கிட்டத்தட்ட மாறாமல் உள்ளது," என்று தெரிய வந்துள்ளது.

இதற்கு மாறாக, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் மிகவும் ஒத்ததாக உள்ளது.

ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் குடும்பப் பொறுப்புகள் பெண்களை இந்த விகிதாசாரத்தில் மிகவும் பாதிக்கிறது என்று ILO சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய நடவடிக்கைகள், பெண்களை வேலை செய்வதிலிருந்து தடுப்பது மட்டுமல்லாமல், தீவிரமாக வேலை வாய்ப்புகளைத் தேடுவதிலிருந்தும் தள்ளி வைக்கிறது.இது பெண்களை வேலையில்லாதவர்களென பிறர் கருதுவதற்கான அளவுகோல்களில் ஒன்றாகி விடுகிறது..

ஐ.நா தொழிலாளர் அமைப்பு குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வேலை இடைவெளி கடுமையாக இருப்பதாக கண்டறிந்துள்ளது, அங்கு கிட்டத்தட்ட கால் பகுதி பெண்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

ஆண்களைப் பொறுத்தவரை வேலையின்மையுடன் தொடர்புடைய விகிதம் 17 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக, ILO தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு கிடைப்பது மட்டும் பிரச்சனை இல்லை.

சொந்தக் கணக்கில் வேலை செய்வதை விட உறவினர்களின் தொழில்களில் உதவுவது உட்பட, சில வகையான பாதிக்கப்படக்கூடிய வேலைகளில் பெண்கள் அதிகமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை ILO உயர்த்திக் காட்டுகிறது.

"இந்த பாதிப்பு, குறைந்த வேலைவாய்ப்பு விகிதங்களுடன் சேர்ந்து, பெண்களின் வருவாயை பாதிக்கிறது" என்று ILO கூறியது.

"உலகளவில், ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலர் தொழிலாளர் வருமானத்திற்கும், பெண்கள் 51 சென்ட் மட்டுமே சம்பாதிக்கின்றனர்" இதற்கிடையில் ஊதிய இடைவெளி பிராந்தியங்களுக்கு இடையே பரவலாக மாறுபடுகிறது, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை 33 சென்ட்களாகக் குறைகிறது, ஆனால் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 58 சென்ட்களை எட்டுகிறது.

"வருவாயில் இந்த குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு பெண்களின் குறைந்த வேலைவாய்ப்பு நிலை மற்றும் அவர்கள் வேலை செய்யும் போது அவர்களின் குறைந்த சராசரி வருவாய் ஆகியவற்றால் உந்தப்படுகிறது" என்று ILO கூறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com