மட்டி வாழைப்பழம்
மட்டி வாழைப்பழம்

கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம் உள்ளிட்ட 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு!

மிழ்நாட்டில் தற்போது மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்தால் அதன் சிறப்பை கூறும் வகையில் அவற்றின் பெயர் அல்லது சின்னத்திற்கு புவிசார் குறியீடு  தரம் வழங்கப்படும். இந்த குறியீடு அந்த பொருளின்  தரத்தையும், நன்மதிப்பையும் எடுத்துக் கூறும்  சான்றாக விளங்கும்.

இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். மேலும்  ஒரு குறிப்பிட்ட பொருளின் உற்பத்தியை வாழ்வாதார நடவடிக்கையாக கொண்டுள்ள மக்களின்  வாழ்க்கை பாதுகாக்கப்படும்.

உலக வணிக அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம், பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு  2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. புவிசார் குறியீடுகளின் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் அதிகமாக தற்போது வரை  58 பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது புவிசார்  குறியீட்டுக்கான அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தற்போது மூன்று புதிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜடோரி கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்யப்படும் நாமகட்டிக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் விளையக்கூடிய மட்டி வாழைப்பழத்திற்கும், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செடிபுட்ட சேலைக்கும் தற்போது புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

இவற்றிற்கான புவிசார் குறியீடுகளை பெறுவதற்கு 2021 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டதாகவும் பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு தற்போது அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது நிலுவையில் இருப்பதாகவும்,  அதில் பெரும்பான்மை விவசாயம் சார்ந்த பொருட்கள் ஆகும் என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com