புவிசார் குறியீடு தமிழகத்திற்கு முதலிடம்!

புவிசார் குறியீடு தமிழகத்திற்கு முதலிடம்!
Published on

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலபரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

புவிசார் குறியீடு பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் நிறைய ஆதாரங்களையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை.

காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 45 பொருட்கள் புவிசார் குறியீடுகளை பெற்றிருந்தன.

இந்த நிலையில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், நகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை உள்ளிட்ட மேலும் 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளன. இதனால் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருட்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

“1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்.

வணிக சின்னம் (ட்ரேட் மார்க்), காப்புரிமை (பேடெண்ட்) மற்றும் புவிசார் குறியீடு (Geographical indication) ஆகிய மூன்று விஷயங்களும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இதில் புவிசார் குறீட்டை தவிர மற்ற இரண்டுமே தனி நபர்களுக்கான உரிமை நிர்ணயிப்பதாக விளங்குகின்றன.

ஆனால் புவிசார் குறியீடு மட்டுமே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது. புவிசார் குறியீடுகளை அதிகமாக பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திலும் அடுத்ததாக கர்நாடக மாநிலம் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேச மாநிலம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com