பேய் திருமணம்: பேய்க்கும் பேய்க்கும் கல்யாணம், அத ஊரே கோலாகலமா நடத்தி வைக்குது… எங்கே தெரியுமா?

Ghosts Marriage
Ghosts Marriage
Published on

பேய் திருமணம் என்பது விசித்திரமாக உள்ளதா? இறந்து போனவர்கள் திருமணம் செய்துக்கொண்டால், சொர்க்கத்தில் இணைந்து சந்தோஷமாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் இருந்துதான் வருகிறது. அதற்கு இறந்தவர்களை இணைத்தா வைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா?

வைக்கிறார்களே… சில காலங்களாகவே இதுபோன்ற வித்தியாசமான திருமணங்கள் நிகழ்ந்துதான் வருகின்றன. இதற்கு உலகத்தில் உள்ள எந்தச் சட்டமும் அனுமதிப்பது இல்லை என்றாலும், சட்டத்திற்கு தெரியாமல் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. உலகம் முழுவதும் நடக்கிறது என்றால், ஜப்பானை மட்டும் ஏன் குறிப்பிட்டு சொல்கிறோம் தெரியுமா?

ஏனெனில், சில நாடுகளில் ஒன்றிரண்டு திருமணங்கள் நடந்தால், ஜப்பானில் மட்டும் அதை ஒரு வழக்கமாக அடிக்கடி செய்து வருகிறார்களாம்.

சரி… இந்த பேய் திருமணம் என்றால் என்ன? அதாவது, திருமணம் ஆகாமல் இருந்த ஒரு பெண்ணும், அதே திருமணம் ஆகாத ஒரு ஆணும் இறந்துப்போய்விட்டால், அவர்களின் சொந்தக்காரர்கள் இணைந்து திருமணம் செய்து வைக்கிறார்கள். சில சமயம் இறந்த ஆணுடன் உயிருள்ள பெண்ணையும், இறந்த பெண்ணுடன் உயிருள்ள ஆணையும் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்றால், விசித்திரமாக இல்லை?

அந்த பெண் இறந்தப்பின் அவருடன் சேர்ந்து வாழ்வாள் என்பது ஜப்பான் மக்களின் நம்பிக்கை. வடக்கு ஜப்பான் இந்த வழக்கத்தை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. எப்படி இங்கு 18 வயதுக்கு குறைவானவர்கள் திருமணம் செய்தால், போலீஸார் உறவினர்களை கைது செய்வார்களோ? அதேபோல் இந்த திருமணத்தை செய்து வைக்கும் உறவினர்கள் உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

இருப்பினும், இந்த நம்பிக்கையானது, அவர்களை இந்த திருமணங்களை செய்து வைக்கத் தூண்டுகிறது.

இதையும் படியுங்கள்:
தற்காப்புக்கலை விளையாட்டாகிய சிலம்பாட்டமும் அவற்றின் பயன்களும்!
Ghosts Marriage

சில படங்களில், காதலி இறந்தால், காதலன் இறந்த காதலியை திருமணம் செய்துக்கொள்வது போல பார்த்திருப்போம். அதை நிஜத்தில் செய்கிறார்கள் இந்த மக்கள்.

இறந்த பிணங்களை சேர்த்து திருமணம் செய்து வைப்பது சரி. சமீபத்தில் கார் விபத்தில் இறந்த ஒரு ஜோடியை போட்டோ வைத்தே திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் உறவினர்கள்.

இதை என்னவென்று கூறுவது?? ஒருவேளை தீரா ஆசையில் இறந்தவர்கள் பேயாக வந்துவிடுவார்கள் என்ற பயமோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com