புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்!

Ghulam Nabi Azad
Ghulam Nabi Azad

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் மாதம், அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் கட்சிக்கு 'ஜனநாயக ஆசாத் கட்சி' (Democratic Azad Party) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு புதுக்கட்சியை தொடங்கப் போவதாக தெரிவிக்கப்பட்டது.  

 இந்நிலையில் குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.  'ஜனநாயக ஆசாத் கட்சி' (Democratic Azad Party) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள அந்த புதிய கட்சி மற்றும் அதன் கொடியை  அறிமுகப்படுத்தினார்.

-அதைத் தொடர்ந்து குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது புதிய கட்சிக்காக உருது மற்றும் சமஸ்கிருதத்தில் இருந்து சுமார் 1,500 பெயர்கள் அனுப்பி இருந்தனர். அந்த வகையில் இந்தி மற்றும் உருது மொழிக் கலவையான 'ஹிந்துஸ்தானி' என்ற பெயரை வைக்க முதலில் நினைத்தோம்.. பிறகு, எனது இந்த புதிய  கட்சி ஜனநாயகமாகவும், அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 'ஜனநாயக ஆசாத் கட்சி' என்ற பெயரை முடிவு செய்தோம்.

இக்கட்சிக் கொடியில் உள்ள மஞ்சள் நிறம் படைப்பாற்றலையும்  வேற்றுமையில் ஒற்றுமையையும்  குறிக்கிறது; வெள்ளை நிறம் அமைதியை குறிக்கிறது.  நீலம், சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, கற்பனை மற்றும் கடலின் ஆழத்திலிருந்து வானத்தின் உயரம் வரையிலான வரம்புகளைக் குறிக்கிறது.

- இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com