கத்தியால் குத்தப்பட்டு சிறுமி படுகொலை: வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

கத்தியால் குத்தப்பட்டு சிறுமி படுகொலை: வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!
Published on

டெல்லியின் ரோஹிணி ஷாபாத் டெய்ரி என்ற பகுதியில் பதினாறு வயது சிறுமி ஒருவர், அவரது ஆண் நண்பரால் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் இந்தக் கெலை பொதுமக்கள் பலரின் கண் முன்பு நடைபெற்றிருப்பது கொடூரமாக உள்ளது. சிசிடிவியில் பதிவாகி இருக்கும் இந்தக் கொலைக் காட்சிகள் தற்போது இணைத்தில் வெளியாகி, கல் மனம் கொண்டோரையும் கரைத்திடும் அளவுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த சிசிடிவி பதிவில் இளைஞர் ஒருவர், சிறுமி ஒருவரை கத்தியால் குத்துகிறார். ஒருசில குத்துகளிலேயே அந்த சிறுமி நிலைகுலைந்து போய் தரையில் விழுந்து விடுகிறார். ஆனாலும், அந்த இளைஞர் விடாமல் அந்த சிறுமியை தொடர்ந்து 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தியவண்ணம் இருக்கிறார். இப்படி கத்தியால் குத்திக் கொண்டிருக்கையில் ஒரு கத்திக்குத்து அந்த சிறுமியின் தலையில் பாய்ந்து விடுகிறது. அதைத் தொடர்ந்து அந்தக் கத்தியை திரும்ப எடுக்க முடியாததால், அந்த இளைஞர் அருகில் இருந்த சிமெண்ட் சிலாப்பை எடுத்து அந்தச் சிறுமியைத் தாக்குகிறார்.

இதில் கொடுமை என்னவென்றால், இந்தக் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்கிறது. ஆனாலும், அதைத் தடுக்க யாரும் முன்வரவில்லை என்பதுதான். மனதை உலுக்கும் இந்தக் கொலையைச் செய்தவர் பெயர் ஷாஹில் என்பதும், கெலையுண்ட சிறுமியின் பெயர் நிக்கி என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்திருக்கிறார்கள். இந்தக் கொலை நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்புதான் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், ஷாஹில் நண்பர் குழந்தையின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில்தான் நிக்கிக்கு இந்த கோர முடிவு ஏற்பட்டு இருக்கிறது. கொலை செய்யப்பட்ட சிறுமி நிக்கியின் தந்தை அளித்த புகாரின்பேரில் ஷாஹில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கொலை செய்த பிறகு தலைமறைவாகிவிட்ட ஷாஹிலை போலீஸார் தேடி வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் 320ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டெல்லி கல்யாண்புரி பகுதியில் 18 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பரால் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்றிருக்கும் இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com