ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 6 கோடி ரூபாய் வரை ஆடு வியாபாரம்!

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு  6 கோடி ரூபாய் வரை ஆடு வியாபாரம்!

தமிழகத்தில் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வியாபாரம் கூடுதலாக இருக்கும். சாதாரண நாட்களில் சுமார் 3 கோடி ரூபாய் வியாபாரம் நடைபெறும் நிலையில் பண்டிகை நாட்களில் சுமார் 6 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும்.

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால் கடைசி நேர விற்பனை என்பதால் சற்று விலை அதிகமாக இருந்தது. கடந்த வாரங்களை விட விலை அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை அதிகமாக இருந்தாலும் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

குறிப்பாக மதுரை காயல்பட்டினம் ,நெல்லை , தேனி, ராமநாதபுரம் , சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்று மாலை தொடங்கி இன்று காலை 10 மணி வரை தொடர்ந்து ஆடுகள் வியாபாரம் நடைபெறும் என்பதால்,, சுமார் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் தமிழ்நாட்டில் முக்கிய சந்தைகளில் ஒன்றான எட்டயபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை சந்தை கூடுகிறது. செம்மறி ஆடு வெள்ளாடு வகைகள் எல்லா தரத்திலும் கிடைப்பதால் தமிழ் நாடு மட்டுமன்றி வெளிமாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகள் வாங்கிசெல்கின்றனர்.

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நேற்று மாலையே சந்தையில் வியாபாரம் கலைகட்டியது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com