ஆடு விற்பனை அமோகம்... ரூ. 1 கோடிக்கு வியாபாரம்! களைகட்டும் ரம்ஜான்  பண்டிகை!

ஆடு விற்பனை அமோகம்... ரூ. 1 கோடிக்கு வியாபாரம்! களைகட்டும் ரம்ஜான் பண்டிகை!

தென் மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் கோடி கணக்கில் விற்பனை நடைபெறும் சந்தைகளில், ஒன்றான பாம்புக்கோயில் ஆட்டுச் சந்தை வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வியாபாரம் பட்டையை கிளப்பியுள்ளது. சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த ஆட்டு சந்தையில் விற்பனை இருந்ததாக சொல்கின்றனர் . நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை ஆனது. சுமார் ரூ. 1 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர்.

இந்த ஆட்டுச்சந்தையில் நெல்லை, கன்னியாகுமரி விருதுநகர், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து இந்த ஆட்டுச் சந்தையில் பங்கேற்று ஆடுகளை கொண்டு வாங்கி செல்வது வழக்கம்.

அதே போன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை பகுதியில் ஆட்டுச்சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொருவாரம் சனிக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெறும். இங்கு சராசரியாக குறைந்த பட்சம் ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சுமார் ரூ. 1 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆகும்.

இந்த ஆட்டுச்சந்தைக்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், கெங்கவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதேபோல ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் இந்த சந்தைக்கு வருவார்கள்.

வெள்ளாடு, செம்மறி ஆடு, மலை ஆடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் தற்போது இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சூழலில், அதிகளவு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனை ஆகி வருகின்றன.

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்த சிறப்பு ஆட்டுச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இதனால் இங்கே வியாபாரம் தற்போது ரூ.1 கோடியை தூண்டியுள்ளது.

ரம்ஜான் பண்டிகையை வர இருப்பதால் அதனை முன்னிட்டு நடைபெறும் இந்த ஆட்டு சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் விற்பனை இருந்ததாக வியாபாரிகள் மகிழ்வுடன் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com