

தமிழகத்தில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1, 13, 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 215 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 450 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது.வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 1,16,960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு 4,160 ரூபாய் அதிகரித்து உள்ளது.
வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3,55,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Date Silver 1 Gm Silver (1 Kg)
24/Jan/2026 355.00 355,000.00
23/Jan/2026 345.00 345,000.00
22/Jan/2026 340.00 340,000.00
21/Jan/2026 345.00 345,000.00
20/Jan/2026 340.00 340,000.00
19/Jan/2026 318.00 318,000.00
18/Jan/2026 310.00 310,000.00
17/Jan/2026 310.00 310,000.00
16/Jan/2026 306.00 306,000.00
15/Jan/2026 310.00 310,000.00