கல் என நினைத்து பொக்கிஷத்தை வீட்டுக்கு கொண்டு வந்த நபர்!

Meteor.
Meteor.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், கல்லின் உள்ளே தங்கம் இருக்கும் என நினைத்து மிகப்பெரிய பொக்கிஷத்தை வீட்டில் வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் தங்கத்தை தேடிச் சென்றபோது, விசித்திரமான பாறை ஒன்றை கண்டுபிடித்தார். அந்த பறையின் உள்ளே தங்கம் இருக்கும் என நினைத்து வீட்டிலேயே பல ஆண்டுகள் வைத்திருந்துள்ளார். ஆனால் சமீபத்தில் அதை உடைத்து பார்த்தபோது அதன் உள்ளே தங்கம் கிடையாது, அதைவிட விலை உயர்ந்த பொருள் என்பதை கண்டுபிடித்தார். 

ஆஸ்திரேலியாவில் உள்ள கைவிடப்பட்ட தங்க சுரங்கம் ஒன்றில், தங்கம் கிடைக்கும் என பலரும் அடிக்கடி சென்று தேடுவது வழக்கம். அப்படிதான் டேவிட் ஹோல் என்ற நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு தங்கவேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு பாறை ஒன்றில் தங்கக் கட்டி இருக்கும் என நினைத்து உடைக்க முயன்றும் முடியவில்லை. அதை அப்படியே எடுத்து வந்து தன் வீட்டு அலமாரியில் சுமார் 6 வருடங்களுக்கும் மேல் வைத்திருந்தார். அந்தக் கல்லை அவர் பலமுறை உடைக்க முயன்றும் முடியாமல் போனது.

மிகவும் வலுவான ஆயுதம் வைத்து உடைக்க முயற்சி செய்தும் அது முடியாமல் போனதால், வேறு வழியின்றி மெல்போர்ன் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்தார். அங்கே அதை வல்லுனர்கள் சோதனை செய்து பார்த்ததில் விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த விசித்திரமான பாறை என்பதை கண்டுபிடித்தனர். அதாவது இது ஒரு விண்கல். இது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். 

17 கிலோ எடை கொண்ட இந்த விண்கல்லில் முழுவதும் நிக்கல், இரும்பு மற்றும் கார்பன் நிறைந்து காணப்பட்டது. இந்த கல்லை ஒரு கடினமான ரம்பத்தை வைத்து அறுத்து பார்த்தபோது, இந்த விண்கல் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இதை ஏலத்தில் விட்டால் அதன் மதிப்பு பல கோடிக்கு செல்லும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

இவ்வளவு மதிப்புமிக்க ஒரு பொருளை ஒரு நபர் பல ஆண்டுகள் அலமாரியில் வைத்திருந்தார் என்பது விசித்திரமாக உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com