gold rate
gold rate

தங்கம் விலை சரிவு : மக்கள் மகிழ்ச்சி!

Published on

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.

தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 80 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,120-க்கு விற்பனையாகிறது.

மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.61.84-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.61,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com