அரை லட்சத்தை தாண்டிய தங்கம் விலை... அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

Gold Price
Gold Price

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை அரை லட்சத்தை தாண்டியுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது வருகிறது. தற்போது மார்ச் மாதம் முடியவுள்ள நிலையில் திடீரென மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.

அதாவது நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.140 உயர்ந்து ரூ.6,390க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சென்னை Sekhmet விடுதி விபத்தில் 3 பேர் பலி... காரணம் என்ன?
Gold Price

இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.114 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 5,234க்கும், சவரனுக்கு ரூ.912 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 41,872க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80க்கும், ஒரு கிலோ ரூ.80,800க்கும் விற்பனையாகிறது. இதுவரை தங்கம் விலை அரை லட்சத்தை எட்டினால் என்னாகும் என்ற கேள்வி எழுந்தது. தற்போது ஒரு சவரன் ரூ.51,000 தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்னும் நகை விலை உயரும் என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com