

போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை ஏறுவதும் குறைவவதுமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெரிய அளவு விலை அதிகரிக்காததால் நகைப் பிரியர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டினர்.
கடந்த வாரம் கணிசமாக அதிகரித்த தங்கம் விலை, வார தொடக்க நாளான இன்று காலை குறைந்தது.
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்.6) சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போர் தொடரும் பட்சத்தில், தங்கம் விலை மேலும் குறையும் என காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விலையில் சற்று முன் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது காலையில் குறைந்த வேகத்தில் மாலையில் உயர்ந்தது.
சென்னையில் இன்று (ஏப்.06) காலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,810க்கு விற்பனையானது. இந்நிலையில், தற்போது கிராமுக்கு ரூ.180 அதிகரித்து ரூ.13,990க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ரூ.1,11,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.