

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ₹5,200 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் 2,400 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹2,800 என உயர்ந்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போரும், இஸ்ரேல்- பாலஸ்தீன போரும் சர்வதேச வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போர் பதற்றம் காரணமாக அச்சமடைந்த முதலீட்டாளர்கள், பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதுவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரக் காரணமாக உள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 2,400 உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 2,400 உயர்ந்து, ஒரு சவரன் 1,21,600க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூபாய் 300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,00,000 விற்பனை செய்யப்படுகிறது.
பிற்பகல் நிலவரம்:
இந்நிலையில் தங்கம் மேலும் விலை உயர்ந்து மாலையில் ரூபாய் 2,800க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ1,24,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூபாய் 350 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,550க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விளையும் உயர்ந்துள்ளது அதாவது கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.320க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் தங்கத்தில் நம் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக சர்வதேச முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு உள்ளது.