
இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்வதை லாபகரமாக கருதுவதுடன், கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுவதால் தங்கத்தை வாங்குவது அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சர்வதேச அளவில் நடக்கும் போர்கள் மற்றும் மோதல்கள் பொருளாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான சொத்தாக கருதி வாங்குகின்றனர்.
இந்த அதிரடி விலை ஏறுமுகம், நடுத்தர மக்கள் இனி நாம தங்கத்தை எப்போ?எப்படி? வாங்குறதுன்னு ஏங்க ஆரம்பிச்சிட்டாங்க...சும்மா சொல்லக்கூடாதுங்க, கடந்த 35 வருஷத்துல தங்கம் செஞ்ச சாதனை சாதாரண விஷயம் இல்லை.
4 வருஷத்துக்கு முன்னால 22kt ஒரு கிராம் தங்கம் ₹6,045.66-க்கு இருந்துச்சு. ஆனா, இப்ப அது 10,000 மேல போயிட்டிருக்கு.
1980-ம் ஆண்டு ரூ.1000-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று (செப்டம்பர் 6) புதிய உச்சம் தொட்டு ரூ.80,040 ஆக உயர்ந்துள்ளது.
ஆண்டு விலை (ஒரு பவுன்)
1980 ரூ.1,000
2001 ரூ.3 ஆயிரம்
2006 ரூ.6 ஆயிரம்
2009 ரூ.10 ஆயிரம்
2010 ரூ.15 ஆயிரம்
2016 ரூ.20 ஆயிரம்
2019 ரூ.25 ஆயிரம்
2020 ரூ.30 ஆயிரம்
2021 ரூ.35 ஆயிரம்
2022 ரூ.40 ஆயிரம்
2023 ரூ.45 ஆயிரம்
2024 ரூ.50 ஆயிரம் (மார்ச் 28)
2024 ரூ.52 ஆயிரம் (ஏப்ரல் 3)
2024 ரூ.55 ஆயிரம் (மே 20)
2024 ரூ.56 ஆயிரம் (செப்டம்பர் 24)
2024 ரூ.58 ஆயிரம் (அக்டோபர் 19)
2024 ரூ.59 ஆயிரம் (அக்டோபர் 29)
2025 ரூ.60 ஆயிரம் (ஜனவரி 22)
2025 ரூ.66 ஆயிரம் (மார்ச் 14)
2025 ரூ.70 ஆயிரம் (ஏப்ரல் 12)
2025 ரூ.75 ஆயிரம் (ஜூலை 23)
2025 ரூ.76 ஆயிரம் (ஆகஸ்டு 29)
2025 ரூ.78 ஆயிரம் (செப்டம்பர் 3)
2025 ரூ.80 ஆயிரம் (செப்டம்பர் 6)