

போர் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், போர் நிறுத்தம் குறித்து பேச தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியதிலிருந்து தங்கம் விலை சற்று ஏற தொடங்கியது.
ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை (மார்ச் 28) கிராமுக்கு ரூ. 230 அதிகரித்து ரூ. 13,660-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, சவரனுக்கு இன்று ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,08,800க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் காலையில் குறைந்த தங்கம் மாலையில் உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ. 1,10,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ. 480 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ. 1,360 உயர்ந்து ரூ.1,10,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று காலை வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒருகிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகலில் ரூ.5 உயர்ந்து ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.