நகை வாங்குவோர் ஷாக்..! ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை..!

Gold price Hike
Gold price
Published on

தங்கம் விலை இன்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் மாலையில் சவரன் ரூ 960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.98,960-க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,370க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்று ஒரேநாளில் ரூ.2,560 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.960 உயர்ந்துள்ளது.

gold rate
gold ratesource:livechennai

அதேபோல் காலையில் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டி கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை ஆனது. தற்போது வெள்ளி விளையும் அதிகரித்துள்ளது மாலையில் வெள்ளி கிராம் ரூ 1 உயர்ந்து, 216 ரூபாய் விற்பனை ஆகிறது.

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், நகைபிரியர்களுக்கு பேரிடியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

silver rate
silver ratesource:livechennai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com