ஷாக் கொடுத்த தங்கம்..! காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு
Gold price
Gold price
Updated on

தங்கம் விலை ஒன்றிரண்டு நாட்கள் ஏறுவதும், அடுத்து இறங்குவதுமாக இருந்து வந்தது. 2025-ம் ஆண்டு நிபுணர்களின் கணிப்பில்தங்கம் விலை தொடர் உயர்வை சந்திக்கும் என்று கூறியிருந்தனர். அதன்படி, ஆண்டு முடிவில் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டியது.ஆனால், கடந்த பிப்ரவரி இறுதியில் ஏற்பட்ட அமெரிக்க - ஈரான் போரானது இந்த கணிப்பை மாற்றியமைத்தது. போர் காலங்களில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாக்கும் நோக்கில் தங்கத்தின் மீது முதலீடு செய்வர். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும். ஆனால் கடந்த பிப்ரவரி இறுதியில் மூண்ட அமெரிக்கா - ஈரான் இடையேயான போரானது இந்த கருத்தை மாற்றியமைத்தது.

மார்ச் மாதத்திலிருந்து தங்கம் விலை சரசரவென சரிந்தது. இதனால் குறைந்த அளவில் தங்கம் வாங்குகிற நகை வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.டாலர் மதிப்பு ,கச்சா எண்ணெய் கொள்முதல் மற்றும் பணவீக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தற்போதைக்கு உயர வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறிவந்தனர்.

ஆனால் வட்டி விகிதம் குறித்த அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முக்கிய முடிவானது உலகளாவிய தங்கம் வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைக்கு வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை என்ற தகவலால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 10 நாட்களுக்குள் ரூ. 8 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.

 Gold
Gold

ஆபரண தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 19) ரூ. 85 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,205க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 1,14,320க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 680 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,13,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மாலையில் தங்கத்தின் விலை அதிரடி உயர்வை கண்டது. தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.680 குறைந்திருந்த நிலையில் மாலையில் ரூ.1,560 அதிகரிப்பு.அதன்படி, கிராம் ஒன்றிற்கு 195 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,560 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன், 1,15,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கடந்த ஆகஸ்ட் 14 அன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்த நிலையில் 4 நாட்களாக விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 255க்கும், ஒரு கிலோ ரூ. 2,55,000க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 250க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தைப் போல் விலை உயராமல், இன்று மாலையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

  • ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.14,290 1 சவரன் ரூ.1,14,320

  • ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.14,270 1 சவரன் ரூ.1,14,160

  • ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760

  • ஆகஸ்ட் 15: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760

  • ஆகஸ்ட் 14: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

  • ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.255

  • ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.255

  • ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.255

  • ஆகஸ்ட் 15: 1 கிராம் - ரூ.255

  • ஆகஸ்ட் 14: 1 கிராம் - ரூ.255

logo
Kalki Online
kalkionline.com