

தங்கம் விலை கணிக்கமுடியாத வகையில் தினந்தோறும் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றம், நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார பிரச்சினைகளை கருத்தில்கொண்டு ஒரு வருடத்திற்கு தங்கத்தின் மீது முதலீடு செய்ய வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார்.
இந்த அறிவிப்பிற்கு அடுத்த நாளே தங்கத்தின் மீதான சுங்க வரியானது 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இன்று ஒரே நாளில் தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்திருக்கிறது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.3,200 குறைந்தது. ஒரு சவரன் ரூ.1,20,000க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.15,000ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிலோவுக்கு ரூ. 15,000 அதிகரித்து ரூ. 3,00,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ரூ. 30,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ. 3,30,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மாலை வேளையில் கிராமுக்கு 10 ருபாய் குறைந்து ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்து ரூ. 3,20,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.