

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படிப்படியாக ஏறிவந்த தங்கம் விலை, ஆண்டு இறுதியில் ரூ. 1 லட்சத்தை தாண்டியது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 2 லட்சத்தை தாண்டும் என கடந்த ஆண்டே நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து நகைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
நேற்று ஒரே நாளில் 9250 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை இன்று சட்டென்று ரூ.4,800 குறைந்தது நகை வாங்குவோர் இடையே பெரும் நிம்மிதியை ஏற்படுத்தியது.சற்றுமுன் மேலும் தங்கம் விலை குறைந்துள்ளது.அதாவது காலையில் சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.2,800 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,26,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.950 குறைந்து ரூ.15,850க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.405க்கு விற்பனை செய்யப்படுகிறது