

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிரடியாக உயர்ந்து வருகிறது.
புலி வருது, புலி வருது என்ற கதையாக தங்கம் விலை ஒரு லட்சத்தை தொடப்போகிறத என்று பூச்சாண்டி காட்டி வந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்தை தொட்டது மட்டுமின்றி அதனைவிட 3 ஆயிரம் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில், இன்று ஜனவரி 7-ஆம் தேதி தங்க விலை மேலும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 22 காரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,870-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் உயர்வு பாதையில் உள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.283-க்கும், ஒரு கிலோ ரூ.2,83,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது .
இந்நிலையில் தங்க விலை காலையில் உயர்ந்த வேகத்தில் மாலையில் குறைந்துள்ளது. சென்னையில், இன்று (ஜன. 7) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில், சற்று முன் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து 1,02,400க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.277க்கும், கிலோவுக்கு ரூ.6,000 குறைந்து ரூ.2.77 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.