

தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. கொஞ்சம் குறையட்டும் பிறகு தங்கத்தை வாங்கலாம் என நினைப்போருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம் விலை உயர்ந்தே வருகிறது. இதனால் ஏழை மட்டுமின்றி மிடில் கிளாஸ் மக்கள் கூட தங்கத்தை வாங்க முடியாத சூழலே தொடர்கிறது.
நேற்று ஜனவரி 20ம் தேதி காலை தங்கம் சவரனுக்கு ரூ.1280 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.2320 உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3600க்கு விற்பனையானது. இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை 2 முறை உயர்ந்திருப்பது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .
இன்று காலை ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.114,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரூ.1,320 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320-க்கும், ஒரு கிராம் ரூ.14,415-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.345க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது