ஒரே நாளில் இருமுறை மாற்றம்; காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம்..!!

ஒரே நாளில் இருமுறை மாற்றம்; சென்னை சந்தையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் தற்போதைய நிலவரம்.
Gold price prediction 2030 தங்கம் விலை
Gold price prediction 2030 தங்கம் விலை
Updated on

தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருப்பதால், தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதிகப்படியான மக்கள் தங்கத்தை நீண்டகால நம்பிக்கைமிக்க முதலீடாக தேர்வு செய்கின்றனர். தங்கத்தின் மீதான முதலீடு இன்று நேற்று தொடங்கியது அல்ல. அது ஆயிரக்கணக்கான வருடமாக பாரம்பரிய முதலீடாக தொடர்ந்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டு அரசாங்கம் கையிருப்பு வைத்துள்ள தங்கத்தை வைத்து மதிப்பிடப் படுகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கங்களுடன், நிலையற்றதாக மாறி விட்டதால், தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக மக்கள் பார்க்கிறார்கள். முதலீடாக மட்டுமின்றி இந்தியாவில் தங்கம் என்பது முதன்மையான ஆபரண பொருளாக உள்ளது. அதிலும் தென்னிந்தியர்கள் தங்கம் வாங்கி குவிப்பதில் , வட இந்தியர்களை அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியர்கள் தங்கத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். தங்க நகைகள் இன்றும் ஒரு கவுரவத்தின் அடையாளமாகவும், நிதிச் செல்வத்தின் அடையாளமாகவும் உள்ளது. தங்களுடைய சமூக கவுரவத்தை அதிகரிப்பதற்காக, நகைகள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் பல ஆபரணங்களை வாங்குவதற்கு, நகைக் கடைக்குதான் மக்கள் விரைகிறார்கள்.

தங்க நகை முதலீட்டில் இருந்து நீங்கள் லாபம் பெற விரும்பினால், 75 சதவீதம் தங்கமாக இருக்கும். 18 காரட்டை விட 22 காரட்டை தேர்வு செய்வது சிறந்தது.

இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தொடர்ந்து அவசர காலத் தேவைக்காக நகைகளை வாங்கி வருகின்றனர். பெண்களும் தங்கமும் ஒரு கனவு போல ஒன்றானவை. இந்திய இல்லத்தரசிகள், உலக மொத்த தங்கத்தில் அதிகபட்சத்தை தங்களோடு வைத்துள்ளார்கள். தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற-இறக்கம் நீடிக்கிறது. அப்படியாக கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலையில் பெருமளவில் இறக்கமே இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இருமுறை மாற்றம் கண்டது.

Gold Making
Gold Making

இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினமும், நேற்றும் தங்கம் விலை குறைந்து வந்தது.

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்தது. அதன்படி, ஒருகிராம் தங்கம் ரூ.13,300-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது.

காலையில் கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்திருந்தது.

மதியத்தில் எவ்வளவு வேகத்தில் குறைந்ததோ அதே வேகத்தில் அதிகரித்தது. மதியம் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் இருமுறை விலை மாற்றம் கண்ட தங்கம், காலையில் சவரனுக்கு ₹2,160 குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ₹1,360 உயர்ந்தது.காலையில் எவ்வளவு வேகத்தில் குறைந்ததோ அதே வேகத்தில் அதிகரித்தது.

இன்றும் (புதன்கிழமை) ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலையில் பெரும் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் ஒரு கிராம் தங்கம் ரூ. 150 உயர்ந்து ரூ.13,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,200 உயர்ந்து ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் இன்று எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ₹245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000-க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சரிந்து பின் மீண்டும் எகிறி வருவது நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை உயர்ந்துள்ளதால் கவலையில் இருந்த முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com