

தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம் தொட்டு ஏழை எளியோருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இனி நினைத்தால் கூட தங்கம் வாங்க முடியாது போல என்ற அளவிற்கு தங்கத்தில் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிசம்பர் 15-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சவரனுக்கு சுமார் ரூ. 45 ஆயிரம் வரை உயர்ந்து, அதிகபட்சமாக ரூ. 1.04 லட்சம் வரை விற்பனையான தங்கம் மற்றும் வெள்ளி விலை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு தற்போது சரியத் தொடங்கியுள்ளது.
முதலீட்டாளர்கள் குறுகிய கால லாப நோக்கில் தங்கத்தை விற்பனை செய்வதால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ. 1,04,160-க்கு விற்பனையானது. இருப்பினும், நாளை புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு ராசியான நாளில் தங்கம் வாங்கும் வழக்கம் மக்களிடையே உள்ளதால், நாளை விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று (டிசம்பர் 30) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 420 ரூபாய் குறைந்து, 12,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 3,360 ரூபாய் சரிவடைந்து, 1,00,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 23 ரூபாய் குறைந்து, 258 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 23,000 ரூபாய் சரிவடைந்தது, 2.58 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இன்று (டிசம்பர் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.வெள்ளி விலை மாற்றிமின்றி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3 ஆயிரத்து 760 ரூபாய் சரிந்துள்ளது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று 2வது முறையாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 குறைந்துள்ளது .தங்கம் விலை ஒரே நாளில் ரூ.960 குறைந்ததால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.99,840க்கும், கிராம் தங்கம் ரூ.12,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.257க்கும், ஒரு கிலோ ரூ.2,57,000க்கும் விற்பனையாகிறது.