#BREAKING : மக்கள் ஷாக்..! ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை..! ஒரு சவரன் ரூ.1.11 லட்சத்தை கடந்தது

gold price
gold rate
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஆபரண தங்கத்தின் விலை நேற்று (ஜனவரி 19) சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆனது.வெள்ளி விலையும் கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 318 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு ஆனது.

இன்று (ஜனவரி 20) மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,08,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,610-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 12,000 அதிகரித்து, ரூ.3,30,000-க்கும், கிராமுக்கு ரூ.12அதிகரித்து. ஒரு கிராம் ரூ.330-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
3 மாடி வீடு, கார், ஆட்டோக்கள்; பிச்சைக்காரரின் சொத்து மதிப்பைக் கேட்டு மிரண்டு போன அதிகாரிகள்..!
gold price
logo
Kalki Online
kalkionline.com