

தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,560 குறைந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமையில் இந்திய பங்கு சந்தைகள் செயல்படாது. அதனால் அன்றைய தினம் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்காது. ஆனால் தற்போது ஈரான் மீதான தாக்குதல், முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அதிக லாபம் தரும் பங்குச்சந்தையிலிருந்து பாதுகாப்பான முதலீட்டுக்கு பலர் திரும்புவதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமையான (மார்.1) தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருந்தது.
கடந்த சனி, ஞாயிறு மட்டும் ஆபரண தங்கம் சவரனுக்கு, 7,000 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு, 30,000 ரூபாயும் அதிகரித்தன.தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 01) ஆபரண தங்கம் கிராம், 15,775 ரூபாய்க்கும், சவரன், 1,26,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 325 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1, 25,200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
தற்போது மாலை இந்த விலை மேலும் குறைந்தது. சவரனுக்கு 1,480 ரூபாயும், கிராமுக்கு 185 ரூபாயும் குறைந்தது.இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,23,720 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 185 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,465 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.