சிவசங்கரன் ஐ.ஏ.எஸ் எனக்கு தாலி கட்டினார்: தங்கக் கடத்தல் வழக்கு ஸ்வப்னா!

ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில்  கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ்  'சதியின் பத்ம வியூகம்' என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார்.

அதில், அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் தனக்கு சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தனக்கு தாலி கட்டினார் என்று எழுதியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டறியப் பட்டது.

அந்த தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து  சுங்க இலாகா, தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே விசாரணை நடத்தின.

இதையடுத்து இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இப்போது ஸ்வப்னா சுரேஷ் எழுதிய. 'சதியின் பத்ம வியூகம்' என்ற சுயசரிதை புத்தகம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் தன்னை சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக ஸ்வப்னா சுரேஷ் எழுதியிருப்பது கேரள அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com