விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
Published on

ங்கக் கடத்தல் என்பது நாளுக்கு நாள் பல்வேறு வழிகளில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விதவிதமான வழிகளில் கடத்தல்காரர்கள் தங்கத்தைக் கடத்தி வந்தாலும் அவற்றை எப்படியாவது அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவதும் வாடிக்கையாகவே நடந்து வருகிறது.

அந்த வகையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலும் தங்கக் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. முக்கியமாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று வரும் பயணிகள், தாங்கள் திரும்பும்போது இந்த விமான நிலையத்தின் வழியாக தங்கத்தைக் கடத்தி வருவது நிறையவே நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நேற்றிரவு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சிக்கு வந்தடைந்தது. அதனையடுத்து விமானிகளை வழக்கம்போல் சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான இரண்டு ஆண் பயணிகளை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியிடம் 60,03,075 ரூபாய் மதிப்பிலான 975 கிராம் தங்கம் பேஸ்ட் வடிவில் கேப்ஸ்யூல்களாக மாற்றப்பட்டு தன்னுடைய உடலில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இன்னொரு பயணியை சோதனை செய்ததில், அவரும் 685 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி, தனது உடலில் மறைத்து கடத்தி வந்தது மட்டுமல்லாமல், தனது பேண்ட் பாக்கெட்டில் 180 கிராம் தங்கச் செயினை மறைத்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரிடமிருந்து 53,25,805 ரூபாய் மதிப்பிலான 865 கிராம் தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த இரண்டு விமானப் பயணிகளிடமிருந்து மட்டும் ஒரே நாளில் 1,840 கிராம் தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து இருக்கிறார்கள். இந்தக் கடத்தல் தங்கத்தின் மொத்த மதிப்பு மட்டும் 1.13 கோடி ரூபாய் என விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து நகைகளைக் கடந்த வந்த அந்த இருவரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com